அமெரிக்காவிலும் சாதனை படைக்கும் கீர்த்தி படம்..!!

தமிழ், தெலுங்கு சினிமாவுலகில் பெரும் கவனத்தையும் வசூலையும் குவித்துவரும் நடிகை கீர்த்தி சுரேஷ் படம் அமெரிக்காவிலும் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மகாநடி’ என்ற பெயரிலும் வெளியாகியிருக்கும் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடித்திருக்கிறார். மேலும் துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவகொண்டா மற்றும் பலர் நடித்துள்ளனர். நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

அமெரிக்காவில் பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் மட்டுமே அதிக வசூலைப் பெறுவது வழக்கம். ஆனால், முதன்முறையாக வளர்ந்து வரும் நடிகையான கீர்த்தி சுரேஷ் நடித்த படம் ஒன்று 2 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலைக் கடந்துள்ளது. இந்த வருடத்தில் அமெரிக்காவில் அதிக வசூலைப் பெற்ற தெலுங்கு படங்களாக ரங்கஸ்தலம் 3.5 மில்லியன், பாரத் அனி நேனு 3.5 மில்லியன், அஞ்ஞாதவாசி 2 மில்லியன் வசூலைக் கடந்துள்ளன.

அந்த வரிசையில் தற்போது மகாநடி படமும் 2 மில்லியன் வசூலைக் கடந்துள்ளது. இன்னமும் படம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் வார வசூலாக மகாநடி உலகம் முழுவதும் 48 கோடி வரை வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*