நயன்தாராவுக்கு என் இசை பிடிக்கும்: அனிருத்..!!

அனிருத், தனக்கும் நயன்தாராவுக்குமான உறவு பற்றியும், தான் இசையமைத்து வரும் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் கதைப் பற்றியும் கூறியுள்ளார்.

தன் இளம் வயதிலேயே தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி இசையமைப்பாளராக வளர்ந்து வருகிறார் அனிருத் . தற்போது அவர் இசையமைத்து வரும் கோலமாவு கோகிலா திரைப்படத்தைப் பற்றியும், தனக்கும் நடிகை நயன்தாராவுக்கும் உள்ள உறவு பற்றியும் பகிர்ந்துள்ளார்.

“ஒரு பெண் தன் வறுமையைப் போக்க போதை மருந்துக் கடத்தல் மேற்கொண்டு வாழலாம் என்று முடிவு செய்கிறாள். இதைத் தொடந்து என்ன ஆகிறது என்பதுதான் கதை. இப்படத்தினை இயக்குநர் நெல்சன், பிளாக் ஹியூமர் என்னும் ஜானரில் காமெடி கலந்த கமர்ஷியல் படமாக இயக்கியுள்ளார்” என்றார்.

நயன்தாரா குறித்து சில விஷயங்களைப் பகிர்ந்துள்ள அவர், “நயன்தாரா தன்னுடைய நெருக்கமான தோழி. தனக்கு அவ்வப்போது சமைத்து விருந்து அளிக்கும் அவருக்கு என் இசை பிடிக்கும். நயன்தாராவின் வாழ்க்கையில் அவ்வளவு ஏற்ற இறக்கங்கள் இருப்பினும் இன்னும் முன்னணி கதாநாயகியாகவே இருக்கிறார் என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்” என்று கூறியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*