ரஜினியால் பூரித்துப்போன டிடி..!!

ரஜினியின் முன்பாக காம்பியரிங் செய்தது மகிழ்ச்சியாக இருந்ததாக, தொகுப்பாளர் டிடி தெரிவித்துள்ளார்.

ரஜினி நடித்து வரும், ‘காலா’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அந்நிகழ்வில் ரஜினி, பா.ரஞ்சித், தனுஷ், கே.எஸ் ரவிக்குமார் மற்றும் தாணு உட்பட பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியை, சின்னத்திரை நட்சத்திரத் தொகுப்பாளரான டிடி தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில், அந்த அனுபவம் குறித்து தற்போது ட்விட்டரில் பகிர்ந்துள்ள அவர், “Let’s give it up for பத்மவிபூஷண், சூப்பர் ஸ்டார் ஸ்ரீ ரஜினிகாந்த் அவர்கள்.. என ரஜினி முன்னிலையிலேயே பேசி, ரஜினியை மேடைக்கு வரவேற்றதை இன்னும் என்னால் நம்பவே முடியவில்லை. அது மிகவும் சிறப்பான ஒரு தருணம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*