அசோக் செல்வனுடன் காதல்?: பிரகதி..!!

நடிகர் அசோக் செல்வனும் பாடகி பிரகதியும் திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்கிற செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பிரகதி.

தொலைக்காட்சி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் திரைப்பட பாடகியானவர் பிரகதி குருபிரசாத். தீரன் அதிகாரம் ஒன்று, பரதேசி, காதலும் கடந்து போகும் உள்பட பல படங்களில் பாடியுள்ளார். நண்பர்களுடன் இணைந்து பாடல் பாடி ஆல்பங்களும் வெளியிட்டு வருகிறார். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவரான பிரகதி அங்குள்ள கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்.

பிரகதியும் நடிகர் அசோக் செல்வனும் நெருக்கமாக நின்று எடுத்துக் கொண்ட பல புகைப்படங்கள் வெளிவந்தது. இருவருமே தங்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் இருவரும் சேர்ந்து அமெரிக்கா சென்று வந்துள்ளனர். இதனால் இருவருக்கும் காதல், விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியானது.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அசோக் செல்வன் எனது நண்பர் மட்டுமே. யாருடனும் காதலோ, திருமணமோ இப்போது இல்லை. நான் இப்போது எனது கல்லூரிப் படிப்பிலும், பாடல்கள் பாடுவதிலுமே கவனம் செலுத்தி வருகிறேன். எனது காதல், கல்யாணம் பற்றி வரும் செய்திகள் எனக்கு வருத்தத்தைக் கொடுத்திருக்கிறது. எனக்கு 20 வயதுதான் ஆகிறது. நான் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது” என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*