பிக் பாஸ் பிரபலத்துடன் ஜோடி சேரும் ஷில்பா..!!

காளி படத்தின் மூலம் கவனம்பெற்றிருக்கும் நடிகை ஷில்பா மஞ்சுநாத், அடுத்ததாக பிக் பாஸ் பிரபலம் ஒருவரின் படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை (மே 18) வெளியான படம் ‘காளி’. கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கிறார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளனர். பெங்களூரைச் சேர்ந்த ஷில்பாவுக்கு இதுதான் முதல் தமிழ்ப் படம். மாடர்ன் பெண்ணான இவர், இந்தப் படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்துள்ளார். மேலும் அவருடைய கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இவர் அடுத்ததாக ஹரிஷ் கல்யாண் ஜோடியாகப் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் வெளியான ‘புரியாத புதிர்’ படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹரிஷ் தற்போது, ‘பிக் பாஸ்’ரைஸாவுடன் ஜோடி சேர்ந்து ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*