ஒரே தல அஜித் தான் : ஸ்ரீசாந்த்..!!

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், உலகத்தில் அஜித் மட்டுமே ‘தல’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய ஸ்ரீசாந்த், ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியபோது சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடையை எதிர்த்து, அவர் தொடர்ந்து மேல்முறையீடு செய்வதும் அதை நீதிமன்றம் நிராகரிப்பதும் தொடர்கிறது.

இவை ஒருபுறம் இருக்க, கிரிக்கெட் மட்டுமில்லாது சினிமா படங்களில் நடிப்பது, அரசியலில் ஈடுபடுவது என பிஸி மோடில் இயங்கி வருகிறார் ஸ்ரீசாந்த். இந்நிலையில் அவர் தனது செல்ஃபி வீடியோ ஒன்றை, சமூக வலைதளத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “அஜித்தின் ரசிகன் நான். சென்னையின் சில சுவர் விளம்பரங்களில், ‘தல’ என யார் யாரையோ குறிப்பிட்டுச் சொல்கிறார்கள் . ஆனால், ‘தல’ என்றால் அது அஜித் அண்ணாதான்; மற்றவர்கள் அதுக்குக் கீழேதான். அதே நேரம், தோனிக்கு உரிய மரியாதையைத் தரவேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஸ்ரீசாந்த், கடந்த ஆண்டு, “ எனக்குப் போட்டிகளில் விளையாடத் தடைவிதிக்கப்பட்டபோது, தோனிக்கு சூழ்நிலையைக் கூறி மெசேஜ் செய்தேன்; ஆனால், அவர் அதற்குப் பதில் அனுப்பவேயில்லை, உதவி செய்யவும் முன்வரவில்லை” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*