டாப் ஹீரோக்களின் படங்களில் பூஜா..!!

தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே, அடுத்ததாக ஜூனியர் என்.டி.ஆர் படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் திரையுலகில் நாயகியாக அறிமுகமான பூஜா ஹெக்டே அதன் பிறகு தமிழில் பட வாய்ப்புகள் குறைந்ததால் தெலுங்கில் கவனம் செலுத்தி பல படங்களில் நடித்துவருகிறார். அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்த துவ்வடா ஜெகன்னாதம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதனால் தெலுங்கில் கவனம் செலுத்திவரும் அவர், அங்கு முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

கொரட்டலா சிவா இயக்கத்தில் ‘பாரத் அனே நேனு’ படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்திருக்கும் பூஜா, அடுத்ததாக அவரது 25ஆவது படமாக உருவாகவிருக்கும் படத்துக்கும் நாயகியாகியுள்ளார். மேலும் பிரபாஸ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்துக்கு நாயகி என்பது மட்டுமல்லாமல் ஜூனியர் என்.டி.ஆர். படத்துக்கும் ஒப்பந்தமாகியுள்ளார்.

திரிவிக்ரம் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். நேற்று படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானதை அடுத்து இன்று ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்த நாள் என்பதால் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். படத்தின் நாயகி பற்றி சஸ்பென்ஸ் வைத்திருந்த படக்குழு மோஷன் போஸ்டரில் பூஜா ஹெக்டே என்பதைத் தெரியப்படுத்தி இருக்கிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*