செல்ஃபி பிடிக்காத நடிகை..!!

சினிமாவுக்கு வந்த ஆரம்பக் காலத்திலேயே இந்த செல்ஃபி பழக்கத்தை வெறுத்தேன் என செல்ஃபி எடுக்கும் கலாச்சாரம் பற்றி நடிகை ராதிகா ஆப்தே கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழில் 2012ஆம் ஆண்டு வெளியான தோனி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதிகா ஆப்தே. அதன் பின்னர் வெற்றிச் செல்வன், அழகு ராஜா, ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி என சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். கபாலியில் அவரின் யதார்த்த நடிப்பு தமிழ் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுத் தந்தது. 2005ஆம் ஆண்டு முதல் பாலிவுட் படங்களிலும் நடித்துவருகிறார். இதனால் பாலிவுட் படங்களில் முன்னணி நடிகைகளுள் ஒருவராகவும் வலம்வருகிறார். தமிழ், இந்தி தவிர மராத்தி, பெங்காலி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துவருகிறார்.

இந்த நிலையில் செல்ஃபி எடுப்பதைப் பற்றி பலரும் கருத்து கூறிவரும் நிலையில் நடிகை ராதிகா ஆப்தேவும் தெலுங்கு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அதில், “ரசிகர்களுடன் செல்ஃபி எடுப்பது எனக்குப் பிடிக்காது. இப்போது பிரபல நடிகையாக இருப்பதால் இதைச் சொல்வதாகக் கருத வேண்டாம். சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலத்திலேயே இந்த செல்ஃபி பழக்கத்தை வெறுத்தேன். யாராவது செல்ஃபி எடுக்க என்னை நெருங்கினால் அங்கிருந்து விலகிச் சென்றுவிடுவேன். இதனால் ரசிகர்களுக்கு மனம் புண்படலாம். அதற்காக எனது கொள்கையை மாற்றிக்கொள்ள முடியாது” என்று கூறியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*