எழுமின்: மாடர்ன் குழந்தைகளுக்கான படம்..!!

‘குழந்தைகளுக்கான திரைப்படம் என்று சொல்லும் படங்கள் அவர்களுக்கானதாக இருக்கிறதா?’ என்பது முக்கியமான கேள்வி. குழந்தைகள் பார்க்கக்கூடாத படம் என்று சொல்லும் படங்களை, ‘குடும்பத்துடன் பார்க்க முடிகிறதா?’ என்றும் கேட்கிறார்கள். இதிலிருந்தே, தங்களுக்கான மகிழ்ச்சிக்குள் குழந்தைகளின் கொண்டாட்டத்தையும் பெற்றோர்கள் அடைப்பதைப் புரிந்துகொள்ளலாம். இப்படிப்பட்ட சூழலில் ‘எழுமின்’ திரைப்படம் பல பெற்றோர்கள் விழித்துக்கொள்ளும் வாய்ப்பை உருவாக்கும் என்று நம்ப வைக்கிறது அதன் ட்ரெய்லர்.

விவேக், தேவயானி நடித்துள்ள ‘எழுமின்’ திரைப்படம் முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக உருவாகியிருக்கும் திரைப்படம். இந்தச் சமூகம் தங்கள் மீது திணிக்கும் அராஜகங்களை எதிர்கொள்வதற்கான வாய்ப்பு என்னவென்பதை படம் பேசுவதாக, அதன் இயக்குநர் விஜி கூறுகிறார். பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான கவுன்சிலிங் சென்டர்கள் திறப்பதைவிட, பாதிக்கப்படாமல் காக்கும் தற்காப்புக் கலையைக் கற்றுக்கொடுங்கள் என்கிறது திரைப்படம். அதற்காக, எல்லா பயிற்சி மையங்களையும் படம் நியாயப்படுத்தவும் இல்லை.

பயிற்சி மையங்களில் பணம் பிரதானப்படுத்தப்பட்டு, பணம் அளவுகோலாக வைக்கப்படுவது எப்படி என்றும், அதனால் குழந்தைகளின் உலகம் எப்படி பாதிக்கப்படுகிறது என்றும் பேசுகிறது திரைப்படம்.


Post a Comment

CAPTCHA
Refresh

*