பாடல் திருடியதாக சர்ச்சை: அனிருத் விளக்கம்..!!

நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் கோலமாவு கோகிலா திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கல்யாண வயசு…’ என்கிற பாடல் காப்பியடித்தது என்பதற்கு இசையமைப்பாளர் அனிருத் விளக்கமளித்துள்ளார்.

கல்யாண வயசு என்கிற இந்தப் பாடலை சிவகார்த்திகேயனை எழுதவைத்து பாடலாசிரியராக அறிமுகம் செய்திருக்கிறார் அனிருத்.

இப்பாடலில் யோகி பாபு நயன்தாராவைத்தான் காதலிப்பதாகச் சொல்லி, ஒரு பெண்ணைக் கவர்வதற்கு ஆண் என்னவெல்லாம் செய்வாரோ அதையெல்லாம் நயன்தாராவைக் கவர்வதற்குச் செய்யும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இப்பாடல் வெளியாகி 4 நாட்களில் 5.5 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. ஒரு லட்சத்து அறுபத்தைந்தாயிரம் லைக்குகள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் இப்பாடல் சிப்ஸ் இசையமைத்த ‘Feeling Me’ என்ற பாடலை அனிருத் திருடி கல்யாண வயசு என்கிற பாட்டிற்கு மெட்டமைத்தார் என்று பலதரப்பினரிடமிருந்தும் விமர்சனம் வைக்கப்பட்டது. இந்த விமர்சனங்களுக்கு பதில் தரும் விதமாக, “நான் பல உலக இசைக் கலைஞர்களுடன் பணிபுரிந்துவருகிறேன். மேலும் கல்யாண வயசு… என்கிற இந்தப் பாடலுக்கு உரிமம் பெற்றுத்தான் இசையமைத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*