பிக் பாஸ் வதந்தி முடிவுக்கு வந்தது..!!

நடிகை சுஜா வருணியின் காதலர் யார் எனும் வதந்தி தானாக உருவாகி, தானாகவே முடிவுக்கு வந்துவிட்டது.

மிளகா, கிடாரி, சேட்டை போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்தவர் சுஜா வருணி. கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் முதல் சீசனில், கடைசிகட்டத்தில் வந்து கலந்துகொண்ட இவர், அந்நிகழ்ச்சிக்குப் பிறகு ரொம்பவே பாப்புலர் ஆனார். இந்நிலையில் அவருக்கும் சிவாஜியின் மூத்த மகனான ராம்குமாரின் இளைய மகன் சிவகுமாருக்கும் காதல் இருப்பதாகச் சொல்லப்பட்டு வந்தது. ஆனாலும், அதிகாரப்பூர்வமாக இருவரும் அறிவிக்கவில்லை.

இந்தச் சூழலில் நடிகர் சிவக்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘சுஜாவைக் கடந்த 11 ஆண்டுகளாகக் காதலிப்பதாகவும் தான்தான் அவரது காதலர் என்றும், பிக் பாஸில் சுஜா ‘அத்தான்’ எனக்குறிப்பிட்டுக் கூறியிருந்ததும் தன்னைத்தான்’ எனக்கூறியுள்ளார். இதனால் இருவரும் காதலிக்கிறார்களா இல்லையா எனத்தெரியாமல் பரவிக்கிடந்த வதந்தி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

சிவகுமார் எனும் சிவாஜி தேவ், சிங்கக்குட்டி, புதுமுகங்கள் தேவை, இதுவும் கடந்துபோகும் ஆகிய படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


Post a Comment

CAPTCHA
Refresh

*