என்.டி.ஆரின் பயோபிக்கில் வித்யா பாலன்..!!

பிரபல தெலுங்கு நடிகர் என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கிறார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் என்.டி. ராமாராவ். திரைத் துறையில் பல சாதனைகள் படைத்த அவரது வாழ்க்கை திரைப்படமாக உருவாக்கப்பட்டுவருகிறது. இந்தப் படத்தில் என்.டி.ஆராக அவரது மகனும் தெலுங்கு நடிகருமான பாலகிருஷ்ணா நடிக்கிறார்.

சமீபத்தில் பூஜையுடன் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்துவந்தது. இயக்குநர் தேஜாவிற்கும், பாலகிருஷ்ணாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தேஜாவுக்கு பதிலாக க்ரிஷ் இயக்குநராக ஒப்பந்தமானார். இவர் பாலகிருஷ்ணாவின் 100ஆவது படமான ‘கௌதமிபுத்ர சாதர்கனி’யை இயக்கியிருந்தார். இந்தப் படத்திற்கு ‘பாகுபலி’எம்.எம்.கீரவாணி இசையமைத்துவருகிறார்.

என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகை வித்யா பாலனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முதலில் ஒப்புக்கொள்ள மறுத்தவர், பின்னர் கதையின் தன்மையை அறிந்து தற்போது சம்மதம் தெரிவித்துள்ளார்.

படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் மூன்றாம் வாரத்தில் துவங்கவுள்ளது. ஜூலை முதல் வாரத்தில் வித்யா பாலன் கலந்துகொள்கிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*