அடங்கமறு: ஷூட்டிங் அப்டேட்..!!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் அடங்கமறு திரைப்படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

வனமகன் திரைப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேலு இயக்கும் அடங்கமறு படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்தார். தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்துள்ளார். போகன், தனி ஒருவன், மிருதன் படங்களைத் தொடர்ந்து இந்த படத்தில் ஜெயம் ரவி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். சாம்.சி.எஸ் இசையமைக்க, சத்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர்.

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள டிக் டிக் டிக் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப்போய்வருகிறது. இந்தியாவின் முதல் ஸ்பேஸ் த்ரில்லர் படம் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தில் நிவேதா பெத்து ராஜ் விண்வெளி வீராங்கனையாக நடித்துள்ளார்.

இது தவிர ஜெயம் ரவி மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2, மனிதன் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் அஹமத் இயக்கும் புதிய படத்திலும் நடிக்கவுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*