2.0 டீசர் ரிலீஸ் எப்போது?..!!

ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் 2.0 படத்தின் டீசர் வெளியீட்டைப் பற்றி வந்த செய்திக்கு விளக்கமளித்துள்ளனர் படக்குழுவினர்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் முதலானோர் நடிக்கும் 2.0 படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகிறது. 3D தொழில்நுட்பத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் உருவாகிவரும் இந்தப் படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஏற்கெனவே இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, பிறகு இந்தப் படத்தின் தொழில்நுட்ப வேலைகள் முடிவுற மேலும் பல நாள்கள் தேவைப்படும் சூழ்நிலை உருவாகியதால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

இப்போது 2.0வின் அனைத்து வேலைகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. படத்தை மிக விரைவில், அதாவது ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள். இதை முன்னிட்டு இந்தப் படத்தின் டீசரை மும்பையில் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்கள் என்ற செய்தி வெளியானது.

இது குறித்து 2.0 படக்குழுவினருடன் கேட்கும்போது, “தற்போது 2.0 போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. டீசர் வெளியீட்டைப் பற்றி இப்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்று கூறினர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*