By June 24, 20180 CommentsReport

சிம்பு பேசும் அரசியல்..!!

நடிகர் சிம்பு பாடியுள்ள பெரியார் குத்து இசை ஆல்பத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி இசையமைப்பது, பாடல்கள் எழுதுவது, பாடுவது எனப் பன்முகம் காட்டி வருகிறார். அதோடு அவ்வப்போது, ஆல்பங்களையும் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். குறிப்பாக அவர் எழுதி பாடிய பீப் சாங் மிகப்பெரிய சர்ச்சைகளை சந்தித்தது. என்றாலும், ஆல்பம் வெளியிடுவதை அவர் நிறுத்தவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் சிம்பு பாடியிருந்த பெரியார் குத்து என்ற இசை ஆல்பத்தின் டீசர் தற்போது வெளியாகி பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அந்தப் பாடல் வரிகளில்,

ஓட்டுக்குத் தலைவனும், நோட்டுக்குத் தொண்டனும் கையேந்திதான் நிக்கனும்

ஆட்சியை புடிச்சு, தாவி, கூவி பல்ட்டியை அடிக்கனும்

உண்மையான நாய் அது நன்றியோடு கெடக்கும், அட வேஷம் போட்டு வந்த நாய் மானங்கெட்டுக் குலைக்கும்

அட்ரா ராசா…

என்று பாடியதோடு, வருது பெரியார் குத்து… என்று ஆவேசமாக சொல்லி முடிக்கிறார் சிம்பு .

வரிகளைக் கவனிக்கும்போது சமகால அரசியல் நிலவரங்களையும், மக்களின் மனநிலையையும் பிரதிபலிப்பவையாக இருக்கிறது என்று பலரும் கருத்துச் சொல்லி வருகிறார்கள். பெரியார் குத்து ஆல்பத்திற்கு மதன் கார்க்கி பாடல் எழுத, தமிழ் மணி இசையமைத்துள்ளார். இந்த ஆல்பத்தை தீபன் பூபதி ரதீஷ்வேலு தயாரித்துள்ளனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*