By June 24, 20180 CommentsReport

விக்ரம் படத்தில் இணைந்த ஜிப்ரான்..!!

ராஜேஷ் செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தமாகியுள்ளார்.

வாகை சூட வா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிய ஜிப்ரான் குறுகிய காலத்திலேயே முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருகிறார். உத்தமவில்லன் படத்தின் மூலம் கமலுடன் இணைந்த ஜிப்ரான் தொடர்ந்து பாபநாசம், தூங்காவனம் படங்களைத் தொடர்ந்து விஸ்வரூபம் 2 படத்திற்கும் இசையமைத்துள்ளார். தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்திலும் ஜிப்ரான் இசையமைப்பாளராக இணைந்துள்ளார்.

இந்த படத்தின் மூலம் முதன்முறையாக விக்ரம் உடன் இணைந்து பணியாற்றவுள்ளார். இதை ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார். மேலும் அவர் தனது பதிவில் இயக்குநர் ரஜேஷ் செல்வாவை இசைக்கலைஞர் எனக் குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ராஜேஷ் இசையை ரசிக்கத் தெரிந்தால் மட்டும் இசைக்கலைஞராகி விடமுடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த படத்தில் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் பிரதான கதாபாத்திரங்களில் ஒருவராக நடிக்கிறார். ஏற்கனவே தூங்காவனம் படத்தை பிரெஞ்சு திரைப்படத்தின் பாதிப்பில் உருவாக்கிய ராஜேஷ் செல்வா இந்த படத்தையும் மற்றொரு பிரெஞ்ச் படத்தின் பாதிப்பில் உருவாக்க உள்ளார்.

படத்தின் பணிகள் ஆரம்பகட்டத்தில் இருக்கும் போதே ட்ரையண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் அதிக விலைக்கு படத்தை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*