By June 24, 20180 CommentsReport

ஜெயிக்கப்போவது யாரு?..!!

இந்த வாரப் போட்டியில் 1.டிராபிக் ராமசாமி, 2.டிக் டிக் டிக், 3.என்ன தவம் செய்தேனோ, 4.ஆந்திரா மெஸ், 5.கார்கில் என ஐந்து தமிழ் படங்கள் களமிறங்கியுள்ளன.

இவற்றில் வியாபார முக்கியத்துவம் மிக்க படமாக நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்துள்ள டிக் டிக் டிக் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இமான் இசையில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கி இருக்கும் டிக் டிக் டிக்சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

திரையரங்குகளுக்கு படம் பார்க்க வருவோர் எண்ணிக்கை குறைந்து வரும் சூழலில் தமிழ் சினிமாவில் வியாபார முக்கியத்துவம் உள்ள நாயகனாக இருக்கும் ஜெயம் ரவி நடித்துள்ள டிக் டிக் டிக் தமிழ் நாடு உரிமை 11.50 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது. இப்படத்திற்கான முன்பதிவு தொடங்கிய முதல் நாளில் படம் வெளியாகும் ஜூன் 22, 23, 24 ஆகிய மூன்று நாட்களுக்கான அனைத்து டிக்கட்டுகளும் முக்கிய பெருநகரங்களில் விற்பனையாகியுள்ளது, விநியோகஸ்தர்களிடம் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

வித்தியாசமான படங்களை சினிமா ரசிகர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர் என்பது உறுதியாகியுள்ளது.

சென்னை நகரம் : 1.50 கோடி,

செங்கல்பட்டு : 2.80 கோடி,

மதுரை: 1.30 கோடி,

திருச்சி: 1.25 கோடி,

சேலம் : 1.20 கோடி,

வட – தென்னாற்காடு : 1. 25 கோடி

நெல்லை : 50 லட்சம்

கோவை : 3 கோடிக்கும் வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.

சமூக செயல்பாட்டாளர் டிராஃபிக் ராமசாமி வாழ்க்கையை கதை கருவாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள படம் டிராஃபிக் ராமசாமி. இப்படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், ரோகிணி, அம்பிகா, இமான் அண்ணாச்சி, கௌரவ தோற்றத்தில் சீமான், பிரகாஷ்ராஜ், விஜய் ஆண்டனி, R. K.சுரேஷ் நடித்துள்ளனர். திரைக்கதை, வசனம் எழுதி விக்கி இயக்கியுள்ளார். தமிழகம் முழுவதும் தயாரிப்பாளரே நேரடியாக வெளியிடுகிறார். தினந்தோறும் ஊடக கவனம் பெற்று வரும் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை கதை என்பதால் கவனத்துக்குரிய படமாக இப்படம் மாறியுள்ளது

என்ன தவம் செய்தோனோ, ஆந்திரா மெஸ், கார்கில் ஆகிய மூன்றும் புதுமுகங்கள் நடித்துள்ள படங்கள், வியாபாரத்துக்கான வாய்ப்பு இல்லை என்பதால் தயாரிப்பாளர்களே நேரடியாக வெளியிடுகின்றனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*