By June 25, 20180 CommentsReport

அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை: தனுஷ்..!!

நடிகர் தனுஷ், தான் நலமுடன் இருப்பதாகத் தனது ரசிகர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் தற்போது ‘மாரி 2’படத்தில் நடித்துவருகிறார். பாலாஜி மோகன் இயக்கும் இப்படத்தில் சாய் பல்லவி ஆட்டோ டிரைவராக நடித்துவருகிறார்.கலெக்டராக வரலட்சுமி நடிக்கிறார். டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்கிறார். மேலும் வித்யா, கிருஷ்ணா, உள்ளிட்டவர்களும் இதில் நடிக்கின்றனர். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நெல்லை மாவட்ட பகுதியில் நடைபெற்றது. தற்போது அடுத்த கட்டப் படப்பிடிப்பு நடந்துவருகிறது. இந்நிலையில் வில்லன் டோவினோ தாமஸ் மற்றும் தனுஷுக்கு இடையேயான சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டபோது எதிர்பாராத விதமாக தனுஷுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. எந்த மாதிரியான காயம் என சரிவரத் தெரியாததால் காயம் குறித்த பலவித வதந்திகள் வெளியில் பரவின.

இந்நிலையில் தனுஷின் ட்விட்டரில் பக்கத்தில் இதற்கான பதில் கிடைத்துள்ளது. ஆம். காயம் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் பதிவிடப்பட்டிருந்த அப்பதிவில், “என்னை நேசிக்கும் மிக அன்பான ரசிகர்களே. மிகப் பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை. நான் தற்போது நலமாக இருக்கிறேன். உங்களுடைய பிரார்த்தனைகளுக்கும் அன்புக்கும் நன்றி. நீங்கள்தான் என்னுடைய பலம்” எனக் கூறி நடிகர் தனுஷ் வதந்திகளுக்கு முற்றிப்புள்ளி வைத்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*