By June 25, 20180 CommentsReport

நித்யா மேனன் படத்தில் துல்கர்..!!

நடிகை நித்யா மேனன் நடித்துள்ள 4மொழிகளில் தயாராகும் பிராணா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்ட்டரை நடிகர் துல்கர் சல்மான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த, ஓ காதல் கண்மணித் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். அதன் பிறகு சூர்யாவின் 24, விக்ரமின் இருமுகன், விஜய்யின் மெர்சல் ஆகிய படங்களில் நடிகை நித்யா மேனன் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது, நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் பிராணா. ஒரே ஒரு கதாபாத்திரத்தை சுற்றி நடப்பதுபோல் இந்தப் படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. த்ரில்லர் ஜானரைக் கொண்ட இப்படம் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என 4 மொழிகளில் தயாராகிறது. வி.கே.பிரகாஷ் இயக்கும் இதற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரசூல் பூக்குட்டி சவுண்ட் டிசைனராக பணியாற்றுகிறார்.

இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் துல்கர் சல்மான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு திரைப்படக் குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இப்போஸ்டர் ரசிகர்களால் லைக் செய்யப்பட்டுப் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, பல குழந்தை பொம்மைகளுக்கு நடுவே நித்யா மேனன் போஸ்ட்டரில் இருப்பதும், படத்தில் பணி புரிந்துள்ள பிரபலமான தொழில் நுட்பக் கலைஞர்களாலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*