கண்ணால் பேசும் பெண்ணே..!!

காற்றின் மொழி படத்தில் நடித்து வரும் ஜோதிகாவை அவர் உடன் நடிக்கும் நடிகை லட்சுமி மஞ்சு அவரது கண்களே அதிகமாகப் பேசுகின்றன என்று வியந்து கூறியுள்ளார்.

பாலிவுட்டில் வித்யா பாலன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் துமாரி சுலு. ராதா மோகன் இயக்கத்தில் இந்தப் படம் தமிழில் காற்றின் மொழி என்ற தலைப்பில் ரீமேக் ஆகிவருகிறது. பண்பலைத் தொகுப்பாளினியாக வித்யா பாலன் நடித்த வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார். பண்பலை நிலையத்தின் உரிமையாளராக நேஹா தூபியா நடித்த கதாபாத்திரத்தில் லட்சுமி மஞ்சு ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார். தெலுங்கு திரையுலகில் வலம் வரும் லட்சுமி மஞ்சு தமிழில் கடல் படத்தின் மூலம் அறிமுகமானார். ஜூன் 4 ஆம் தேதி சென்னையில் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வரும் படப்பிடிப்பில் ஜோதிகாவுடன் லட்சுமி மஞ்சுவும் கலந்துகொண்டுள்ளார்.

ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்த ‘மொழி’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மாற்றுத் திறனாளியாக ஜோதிகாவின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது. வாய் பேச முடியாத போது ஜோதிகா கண் அசைவிலேயே பார்வையாளர்களை தன்வசப்படுத்தினார். அவருடன் முதன்முறையாக இணைந்து நடிக்கும் லட்சுமி மஞ்சு ஜோதிகாவின் நடிப்பை பார்த்து வியந்துள்ளார்.

“ஜோதிகாவுடன் இணைந்து பணியாற்றுகிறேன்….வாவ்..என்ன திறமை.. எப்போதும் நான் அவரது ரசிகை. இப்போது இன்னும் அதிகமாகியுள்ளது. அவரது கண்கள் அதிகம் பேசுகின்றன” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு சூர்யாவின் பக்கத்தை அதில் குறிப்பிட்டுள்ளார்.

விதார்த், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குமாரவேல், மோகன் ராமன், உமா பத்மநாபன் உட்பட பலர் இணைந்து நடிக்கின்றனர். காஷீப் இசையமைக்க மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார். அக்டோபர் மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*