தமிழ்ப்பட இயக்குனர் பாலியல் தொந்தரவு – நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டு..!!

சமீபகாலமாக தென்னிந்திய சினிமாவில் பாலியல் குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் அதிக அளவில் எழுந்திருக்கிறது. இதன் உச்சக்கட்டமாக தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறினார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- “உங்களுடைய ஆரம்ப கால வாழ்க்கை எப்படி இருந்தது?”

பதில்:- “நான் சிறு வயதிலேயே துணிச்சலான பெண்ணாக தான் வளர்ந்தேன். என்னுடைய குடும்பம் நடுத்தரமானது. டி.வி.யில் செய்தி வாசிப்பாளராக இருந்தேன். அங்கிருந்து சினிமாவில் நடிக்க வந்தேன்.”

கே:- “பெரிய ஹீரோக்களை எதிர்க்கும் போது பல்வேறு சிக்கல்கள் வருமே. எப்படி சமாளிக்கிறீர்கள்?”

ப:- “என்னைப் பொறுத்த வரை ‘வி.ஐ.பி.’, சாமானியன் என்பதெல்லாம் கிடையாது. எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கிறது. அல்லுரி சீதா ரமராஜூ, சே குவாரா, பகத் சிங்… இவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைப் படித்திருக்கிறேன். பூலான் தேவி, ஜோதிரவ் பூலே ஆகியோரை முன்மாதிரியாக நினைக்கிறேன். அதனால் எனக்கு உள்ளுக்குள் தைரியம் இருக்கிறது.”

கே:- “உங்களுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் ஆண்கள் மீது வெறுப்பை உண்டாக்கியிருக்கிறதா?”

ப:- “அப்படி சொல்ல முடியாது. நான் ஆண்களுக்கு எதிரானவள் அல்ல. ஆண்களை நான் ரொம்பவும் நேசிக்கிறேன். மதிக்கிறேன். ஆனால் ஆண்கள் மட்டும் எப்படி வேண்டுமானாலும் உடை அணியலாம், எந்த நேரம் என்றாலும் வெளியே செல்லலாம். பெண்களுக்கு கட்டுப்பாடு வேண்டும் என்று சொல்வதை நான் எதிர்க்கிறேன். பெண்கள் மீது பாலியல் ரீதியிலான தொந்தரவு எழுந்தால் தட்டிக் கேட்பேன்.”

கே:- “உங்கள் குற்றச்சாட்டில் தமிழ் இயக்குனர்களின் பெயர்களும் அடிபட்டதே?”

ப:- “தமிழ் சினிமா மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. ஆனால், இங்கும் பாலியல் தொந்தரவு இருக்கிறது. ஒரு மிகப்பெரிய இயக்குநர், பட வாய்ப்புத் தருவதாகக் கூறி என்னை பயன்படுத்திக்கொண்டார்.

நேரம் வரும்போது கண்டிப்பாக அதை பகிரங்கமாக சொல்வேன். இந்த ஒரு வி‌ஷயத்தை தவிர்த்துவிட்டுப் பார்த்தால்… தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு மரியாதை கொடுக்கிறார்கள். கோவில் கட்டும் அளவுக்குக்கூட பாசம் வைக்கிறார்கள்..”

கே:- “தெலுங்கு கதாநாயகர்கள் மீது நீங்கள் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறதா?”

ப:- “எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் 90 சதவீதம் ஆதாரம் இருக்கிறது. பத்து சதவீதம் மட்டும் இல்லை. அமெரிக்காவில் ‘பலான வி‌ஷயத்தில் மாட்டிய தெலுங்கு நடிகைகள்’ என்கிற செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த வி‌ஷயத்தை விசாரிப்பதற்கு அரசு இறங்கி இருப்பது, என்னுடைய குற்றச்சாட்டை வலுப்படுத்துகிறது.”

கே:- “உங்களை தமிழ் சினிமாவில் எப்போது பார்க்கலாம்?”

ப:- “தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். என் வாழ்க்கையை தமிழ் சினிமாவிலேயே அர்ப்பணிக்க நினைக்கிறேன்.


Post a Comment

CAPTCHA
Refresh

*