குறும்படங்கள், திரைப்படங்களை ஊக்குவிக்க வரும் டீக்கடை சினிமா விருது..!!

கைத்தட்டல் சத்தத்தில் உன் கண் கலங்கினால் நீயும் கலைஞனே என்கிற உணர்வோடு சக கலைஞர்களை ஊக்குவிக்க டீக்கடை சினிமா என்ற அமைப்பு சிறந்த குறும்படங்களைத் தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு குறும்படங்கள் மட்டுமில்லாமல், சிறந்த திரைப்படங்களுக்கும் விருதுகள் வழங்கவுள்ளது.

முறைப்படி நடுவர்களை வைத்து தேர்ந்தெடுத்து படங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என முப்பது விருதுகளை வழங்குகிறது. இதில் சிறந்த திரைப்படங்களாக `தீரன் அதிகாரம் ஒன்று’, `மாநகரம்’, `அறம்’, `அருவி’, `ஒரு கிடாயின் கருணை மனு’, `குரங்கு பொம்மை’, `8 தோட்டாக்கள்’, `மரகத நாணயம்’ உள்ளிட்ட பல படங்களுக்கும், குறும்படங்களுக்கும் மற்றும் கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இந்j நிகழ்வை R.G.எண்டர்டெயின்மென்ட், கிரிஷ் மீடியாவும் நிஷான் மீடியாவும் இணைந்து நடத்துகின்றன.

திரையுலகின் சிறப்பு விருந்தினர் பலரும் பங்கேற்கவுள்ள இவ்விழா, வருகிற 11-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*