விண்வெளியில் ஒரு பிளாக் காமெடி..!!!

பிளாக் காமெடி பாணியில் தயாராகிவருகிறது அறிமுக இயக்குநர் ஜெயப்பிராகாஷ் இயக்கும் விண்வெளிப் பயணக் குறிப்புகள் திரைப்படம்.

தமிழ் சினிமா இயக்குநர்கள், குறிப்பாக அறிமுகமாகும் இளம் இயக்குநர்கள் சமீபகாலமாக அதிகம் ஆர்வம் செலுத்துவது பிளாக் காமெடி வகைப் படங்களில்தான். சூது கவ்வும், மூடர் கூடம் உள்ளிட்ட படங்கள் பெற்ற வரவேற்பு இந்த வகையின் பக்கம் இயக்குநர்களும் ரசிகர்களும் திரும்பக் காரணமாக அமைந்தது.

சிறிய நகரத்தில் அரசியல் பின்னணியோடு வலம் வரும் கதாநாயகன் சற்று ஆர்வக் கோளாறாகச் செயல்படக்கூடியவன். விண்வெளிக்குப் பயணம் போவது பற்றி கேள்விப்பட்டு தானும் விண்வெளிக்குப் பயணம் போக முடிவெடுக்கிறான். அதனால் நிகழும் சம்பவங்களை வைத்து சுவாரஸ்யமாகத் திரைக்கதை அமைத்துள்ளனர் இயக்குநர். பாலு மகேந்திரா பயிற்சி பட்டறையில் படித்த அத்விக் ஜலேந்தர் இந்தப் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

நவீன நாடகங்களில் பங்கெடுத்துவரும் பூஜா ராமகிருஷ்ணன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமூகம் கற்பித்துவைக்கும் ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடுகளை ஒதுக்கிவைத்துத் தனது வாழ்க்கையைத் தானே தீர்மானிக்கூடியதாக அவரது கதாபாத்திரம் உருவாகியுள்ளது.

தமிழின் முதல் விண்வெளித் திரைப்படம் என அறிவிக்கப்பட்ட டிக் டிக் டிக் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் பிளாக் காமெடியில் உருவாகும் இந்தப் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டீசர் ஏற்கனவே வெளியாகிய நிலையில் விரைவில் படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ளன.


Post a Comment

CAPTCHA
Refresh

*