யூ டியூப்பில் ஹிட் அடித்த பாடல்..!! (வீடியோ)

சல்மான் கான், கேத்ரினா கைஃப் இணைந்து நடித்த டைகர் ஸிந்தா ஹை படத்தின் ‘ஸ்வாக் சே ஸ்வாகத்’ பாடல் இந்தியாவிலேயே யூ டியூப்பில் அதிகமுறை பார்க்கப்பட்ட பாடல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி இப்பாடல் யூ டியூப்பில் பதிவேற்றப்பட்டது. ஒரு ஆண்டு நிறைவடைவதற்குள் 50 கோடி பார்வைகளைப் பெற்ற முதல் பாடல் என்ற சிறப்புடன் தற்போது ஐம்பது கோடியே நான்கு லட்சத்து எண்பத்து ஒன்பதாயிரம் பார்வைகளைக் கடந்துள்ளது.

அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸீல் வசூல் சாதனை படைத்தது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் இப்படத்துக்கான வரவேற்பு அதிகமாக இருந்தது. 2012ஆம் ஆண்டு வெளியான ஏக் தா டைகர் படத்தின் அடுத்த பாகம் இது ஆகும். கபீர் கான் முதல் பாகத்தை இயக்கியிருந்தார். சுல்தான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அலி அப்பாஸ் ஜாபர் இந்தப் படத்தை இயக்கினார்.

விஷால் மற்றும் சேகர் இசையமைத்துள்ள இந்தப் பாடலை விஷால் டட்லானி, நேகா பேஸின் இணைந்து பாடியுள்ளனர். வைபவி மெர்ச்சன்ட் நடன இயக்கம் செய்த இப்பாடலுக்கான படப்பிடிப்பு கிரீஸில் நடைபெற்றது. 100 நடன கலைஞர்கள் கலந்துகொண்டனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*