நயன்தாராவின் நாயகி ரூட்..!!

நடிகைகளுக்கு முக்கியத்தும் கொடுக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா தற்போது அதே பாணியில் ஹாரர் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

டோரா, அறம், கோலமாவு கோகிலா என நடிகைகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்வு செய்து நடித்து வந்த நயன்தாரா, மீண்டும் அதே முயற்சியில் இறங்கி இருக்கிறார். லட்சுமி, மா என்ற குறும்படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குநர் சர்ஜூன். இதனை அடுத்து , எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக் கருவை மையமாக வைத்து, நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

ஹாரர் பாணியில் உருவாகி வரும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இது குறித்து படக்குழுவினருடன் தொடர்பு கொண்டு பேசிய போது, “முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்போது அஜித் நடிப்பில் உருவாகி வரும் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். அந்த படப்பிடிப்பு முடிந்த உடன் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

முதல் மற்றும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது. ஹாரர் பாணியில் உருவாகுவதால் ஒரே வீட்டில் நடப்பது போல் திட்டமிட்டுப் படப்பிடிப்பு நடத்தி வருகிறோம். மேலும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் பொள்ளாச்சியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. படத்தில் நயன்தாராவை தவிர முன்னணி நடிகர்களாக ஜெயபிரகாஷ், யோகி பாபு, கலையரசன் ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றவர்கள் அறிமுக நடிகர்கள். இதில் நயன்தாராவிற்கு ஜோடியாக யாரும் நடிக்கவில்லை” என்றார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*