விஜய்: வதந்திக்கு முற்றுப்புள்ளி..!!

இயக்குநர் விஜய்க்கு இரண்டாம் திருமணம் பற்றி வந்த செய்திகளுக்கு அவர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பட உலகில் முன்னணி இயக்குநராக இருப்பவர் ஏ.எல்.விஜய். இவர் விஜய்யின் தலைவா, அஜித்தின் கிரீடம், விக்ரமின் தாண்டவம், தெய்வத்திருமகள், ஆர்யாவை வைத்து மதராச பட்டினம், ஜெயம் ரவியின் வனமகன் மற்றும் சைவம், இது என்ன மயக்கம், தேவி, தியா ஆகிய படங்களை இயக்கி உள்ளார். இப்போது பிரபுதேவா நடிக்கும் லட்சுமி, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.

விஜய்க்கும் பிரபல நடிகை அமலா பாலுக்கும் காதல் மலர்ந்து 2014ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், இரண்டு வருடங்களிலேயே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் சுமுகமாகப் பேசி கடந்த வருடம் பிப்ரவரி மாதம் விவாகரத்து செய்து கொண்டார்கள். அமலா பால் தற்போது படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

விஜய்க்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க பெற்றோர் விரும்பினர். அதற்கு இத்தனை நாட்களாக மறுத்து வந்த இயக்குநர் விஜய் இப்போது சம்மதம் தெரிவித்து இருக்கிறார் என்ற செய்தி கடந்த சில தினங்களாக வலம் வந்தன. இது தொடர்பாக அவரது மேனேஜரைத் தொடர்பு கொண்டு பேசிய போது, “அது முற்றிலும் பொய்யான தகவல். தற்போது லட்சுமி திரைப்படத்திற்கான சென்சார் பணிகள் போய்க்கொண்டிருக்கிறது. அடுத்து நயன்தாராவை வைத்து இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டிருக்கின்றன. இப்போது இதில் தான் கவனம் செலுத்தி வருகிறார் விஜய்” என்றார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*