By July 10, 20180 CommentsReport

பிரகாஷ்ராஜ் எனது தந்தை போன்றவர் – அனுபமா..!!

பிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் நடித்தார். தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வரும் அனுபமா, ஹலோ குரு பிரேமகோசம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரகாஷ்ராஜுக்கு மகளாக நடிக்கிறார். படப்பிடிப்பின் போது, அனுபமா அவருடன் தகராறு செய்ததாகவும், அதனால் இருவரையும் செட்டில் இருந்து இயக்குனர் வெளியேற்றியதாகவும் செய்திகள் வந்தன.

இதை அனுபமா மறுத்துள்ளார். ‘அவர் எனக்கு தந்தை போன்றவர். அவருடன் நான் வாக்குவாதம் செய்தேன் என்று சொல்வது சிரிப்பாக உள்ளது. யாரோ திட்டமிட்டு பரப்பிய வதந்தி’ என்று கூறி இருக்கிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*