By July 10, 20180 CommentsReport

நிவின் பாலியுடன் இணைந்த பிரபல பாடலாசிரியர்..!!

நிவின் பாலி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘காயம்குளம் கொச்சூன்னி’. இவருடன் இப்படத்தில் பிரியா ஆனந்த், பிரியங்கா திம்மேஷ், சன்னி வேன், பாபு ஆண்டனி மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் மோகன்லால் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

தற்போது இப்படத்திற்கு வசனம் மற்றும் பாடல்களை எழுதி வருகிறார் மதன் கார்க்கி. 1800 ஆம் ஆண்டுகளின் பின்னணியில் அமைந்திருக்கும் இந்த படம், ராபின்ஹூட் போன்ற கதாபாத்திரத்தை சுற்றி அமைந்துள்ளது.

நேரடி மற்றும் புத்தம் புதிய ஸ்கிரிப்ட்க்கு வசனம் எழுதுவதே ஒரு கடினமான பணியாக இருக்கும்போது, அதுவும் டப்பிங் பதிப்புகளுக்கு எழுதுவது எப்படி இருக்கும். இந்த வகையில், மதன் கார்க்கி பாகுபலி படங்களுக்கும், சமீபத்திய கிளாசிக்கல் ஹிட்டான ‘நடிகையர் திலகம்’ படத்துக்கும் வசனம் எழுதியது ஒரு மகத்தான, தனித்துவமான சாதனை. இதன் மூலம், மதன் கார்க்கி மற்ற பிராந்திய மொழிகளில் உருவாகும் சரித்திர படங்களுக்கு, அதன் சாரம் மாறாமல் தமிழுக்கு வசனம் எழுதும் ஒரு ‘நுழைவாயில்’ ஆனார் மதன் கார்க்கி.

இவர்கள் கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு தற்காலிக தலைப்பாக ‘மலைக்கள்ளன்’ என்ற தலைப்பை வைத்திருக்கிறார்கள். விரைவில் அதிகாரப்பூர்வ தலைப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*