By July 11, 20180 CommentsReport

ஸ்ரீரெட்டி லிஸ்ட்டில் தமிழ் இயக்குநர்…!!

தமிழ்ப் பட இயக்குநர் ஒருவர் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

தெலுங்குத் திரையுலகில் பட வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தற்போது அதிகரித்துள்ளது என்று துணிச்சலாகத் தெரிவித்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. சில தெலுங்குத் திரையுலகப் பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு அவர்கள் செய்த லீலைகளின் விவரங்களைத் தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழ் இயக்குநர் ஒருவர் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புது புகார் ஒன்றைக் கூறியிருக்கிறார். அந்த இயக்குநர் யார் என்ற விவரத்தை விரைவில் வெளியிடுவதாகவும் கூறியுள்ளார். ஸ்ரீரெட்டி யார்மீது குற்றம் சுமத்தினாலும் அதற்கான ஆதாரங்களையும் சேர்த்து வெளியிட்டு வருகிறார். எனவே, தற்போது அந்தத் தமிழ் இயக்குநர் யாராக இருக்கும் என்று யூகிக்கத் தொடங்கியுள்ளனர்.

மேலும், தனக்கு நடந்த அந்த ஒரு சம்பவத்தைத் தவிர்த்து தமிழ் சினிமாவில் பெண்களை மரியாதையுடன் நடத்துகிறார்கள். நான் விரைவில் தமிழ்ப் படத்தில் நடிப்பேன். தமிழ் சினிமாவுக்காக என் வாழ்க்கையை அர்ப்பணிக்கத் தயார் என்றும் கூறியிருக்கிறார் ஸ்ரீரெட்டி.


Post a Comment

CAPTCHA
Refresh

*