By July 11, 20180 CommentsReport

அருவி’ பட இயக்குநரின் அடுத்த அப்டேட்..!!

அருவி படத்தின் இயக்குநர் தனது அடுத்த படத்தையும் அதே குழுவோடு இணைந்து தொடங்கியுள்ளார்.

இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலேயே சர்வதேச அங்கீகாரங்கள் பெற்று கவனம் பெற்றவர் அருண் பிரபு. அருவி படத்தை கதாநாயகியை மையமாக வைத்து உருவாக்கியிருந்தார். அதிதி பாலனும் அறிமுகமான முதல் படத்திலேயே சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பு பெற்றார். இவர் இயக்கும் அடுத்த படத்துக்கான பூஜை மே மாதம் குமுளி அருகில் உள்ள பளியங்குடி என்ற இடத்தில் நடைபெற்றது.

தற்போது படத்தின் இசைப் பணிகளை அருண் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் மேற்கொண்டு வருகிறார். அருண் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் அங்குள்ள இசைக்கலைஞர்களுடன் பணியாற்றிய புகைப்படங்களை பதிவேற்றி அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

​நடிகர், நடிகைகள் இன்னும் முடிவுசெய்யப்படவில்லை. அருவி’ படத்தில் படத்தொகுப்பாளராக பணிபுரிந்த ரேமண்ட் இதிலும் பணிபுரிகிறார். ‘மேயாத மான்’ படத்தின் இசையமைப்பாளர்களில் ஒருவரான பிரதீப் குமார் இசையமைக்கிறார். குட்டி ரேவதி பாடல்கள் எழுதுகிறார். அருவி படத்தை தயாரித்த 24 ஏஎம் ஸ்டுடியோஸ் இந்த படத்தையும் தயாரிக்கிறது. விரைவில் படம் பற்றிய அடுத்த அறிவிப்புகள் வெளியாக உள்ளன.


Post a Comment

CAPTCHA
Refresh

*