By July 11, 20180 CommentsReport

பிரபல நடிகரின் மகன் திருமணம் நிறுத்தம்..!!

பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரபோர்த்தியின் மகன் திருமணம் திடீரென நிறுத்தப்பட்டது.

இந்தி சினிமா உலகில் 1980களில் கொடிகட்டி பறந்த நடிகர்களில் மிதுன் சக்கரபோர்த்தியும் ஒருவர். இவர், சினிமா துறை மட்டுமின்றி, நட்சத்திர ஓட்டல்களையும் நடத்தி வருகிறார். ஊட்டியில் இவருக்குப் பெரிய நட்சத்திர ஓட்டல் ஒன்று உள்ளது. இது தவிர மசினகுடி அருகேயுள்ள பொக்காபுரம் பகுதியில் பெரிய தங்கும் விடுதி ஒன்றும் உள்ளது.

இந்த நிலையில், இவரது மகன் மகாக்‌ஷை திருமணத்தை ஊட்டியில் உள்ள இவரது நட்சத்திர ஓட்டலில் (ஜூலை 7 ) நடத்த திட்டமிடப்பட்டு இவரது உறவினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை மட்டும் திருமணத்திற்கு அழைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் இந்தத் திருமணம் நடப்பது உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் மீடியாக்களுக்குக் கூட தெரியாது.

இந்த நிலையில், மிதுன் சக்கரபோர்த்தியின் மகன் மகாக்‌ஷை தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாகவும், தான் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானதாகவும் ஏற்கனவே நடிகை ஒருவர் கொடுத்திருந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் ஊட்டிக்கு விரைந்துள்ளனர். அவர்கள், மிதுன் சக்கரபோர்த்தி மற்றும் அவரது மகனிடம் இது தொடர்பான விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் மடால்ஷா என்பவருடன் நடக்கவிருந்த இத்திருமணம் திடீரென நிறுத்தப்பட்டது.


Post a Comment

CAPTCHA
Refresh

*