By July 12, 20180 CommentsReport

தமிழுக்கு வரும் பிரபலத்தின் மகள்..!!

நடிகர் டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவானி ராஜசேகர், விரைவில் தமிழ் சினிமாவில் களம் புக இருக்கிறார்.

இந்தியில் அர்ஜுன் கபூர், ஆலியா பட் நடித்த ‘2 ஸ்டேட்ஸ்’ படத்தின் ரீமேக்கில் தற்போது நடித்து வருபவர் ஷிவானி ராஜசேகர். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை வெங்கட் குஞ்சம் இயக்குகிறார். அதிவி ஷேஷ் நடிக்கும் இந்தப் படத்தை லக்‌ஷ்யா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் ஷிவானி தமிழுக்கு வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஒரு ரொமாண்டிக் காதல் திரைப்படமாக இருக்கும் எனும் தகவல் மட்டும் தற்போது வெளியாகியிருக்கும் நிலையில் இதுகுறித்த முழு தகவல்கள் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என ஆல்ரவுண்டராக அறியப்படுபவர் டாக்டர் ராஜசேகர். இவரது மனைவி ஜீவிதாவும் பிரபல நடிகையாவார். ஷிவானிக்கு ஷிவாத்மிகா எனும் தங்கையும் உள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*