By July 12, 20180 CommentsReport

டைரக்டரா, மீம் கிரியேட்டரா?..!!

‘தமிழ்ப்படம்-2’வின் இரண்டு நிமிடக் காட்சியுடன் படம் வெளியீடு குறித்த அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன.

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் வெளியான ‘தமிழ்ப்படம்’ தமிழ் சினிமாவை மட்டும் கலாய்த்து உருவாகியிருந்தது. ஆனால், ‘தமிழ்ப்படம்-2’ போஸ்டரில் இருந்து காட்சிகள் வரை சினிமா மட்டுமல்லாமல் உள்ளூர் அரசியல் முதல் தேசிய அரசியல் வரை கலாய்த்து உருவாகியுள்ளது.

சின்ன கவுண்டர், காலா, சர்கார் எனத் தினம் ஒரு படத்தை கலாய்த்து போஸ்டர்கள் வெளியாகிவருவதால் அடுத்து எந்தப் படத்தில் கைவைத்துள்ளனர் என ரசிகர்கள் மட்டுமல்லாமல் கோலிவுட் வட்டாரமே கூர்ந்து கவனித்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் இரண்டு நிமிடக் காட்சியை வெளியிட்டு அரசியல் பிரச்சினைகளை காமெடியாக்கி உள்ளனர்.

ஜிஎஸ்டி, மோடி கொடுப்பதாக சொன்ன 15 லட்சம் ரூபாய், ஜல்லிக்கட்டு, அணைகள் பிரச்சினை என இரண்டு நிமிடத்தில் பல விஷயங்களைச் சமூக வலைதளங்களில் வலம்வரும் மீம் கிரியேட்டர் போல் கலாய்த்துச் செல்கிறார் இயக்குநர். ‘ஏன் லேட்?’ என ஐஸ்வர்யா மேனன் கேட்க, ‘கலவரத்தை அடக்கிவிட்டு ஓப்பனிங் சாங் முடிச்சுட்டு வருவதற்கு லேட்டாகி விட்டது’ என வழக்கம் போல சிவா பஞ்ச் வைக்கிறார்.

தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக உள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*