By July 12, 20180 CommentsReport

நோ டிராமா’: எம்பிரான் அப்டேட்..!!

எம்பிரான் படம் எந்த வகையைச் சார்ந்தது என அப்படத்தின் இயக்குநர் கிருஷ்ண பாண்டி தெரிவித்துள்ளார்.

தடையற தாக்க, மீகாமன் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனியிடம் உதவி இயக்குநராக இருந்தவர் கிருஷ்ண பாண்டி. இவர் தற்போது எம்பிரான் எனும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். விக்ரமன் இயக்கிய நினைத்தது யாரோ படத்தில் நடித்த ரெஜித் மேனன் இதில் நாயகனாக நடிக்கிறார். கன்னட நடிகை ராதிகா பிரீத்தி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிகர் மெளலி நடிக்கிறார். பிரசன் பாலா இசையமைக்க புகழேந்தி ஒளிப்பதிவு செய்கிறார். பஞ்சவர்ணம் பிலிம்ஸ் சார்பில் பஞ்சவர்ணம் மற்றும் சுமலதா ஆகியோர் இணைந்து இந்தப்படத்தைத் தயாரிக்கிறார்கள்.

இந்நிலையில், இயக்குநர் கிருஷ்ண பாண்டி படம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், “தான் அறிமுக இயக்குநராக இருந்தபோதும், இதை வித்தியாசமாக எடுக்க முடிவு செய்திருக்கிறேன். இதனால் இந்தப்படம் வழக்கமான சினிமாவாக இருக்காது. படம் முழுக்கவே யதார்த்தமாக இருக்கும். இதில், ரெஜித் மேனன் டாக்டராக நடிக்கிறார். காமர்ஸ் படிக்கும் மாணவியாக நடிகை ராதிகா பிரீத்தி நடிக்கிறார். படத்தில் இருவரது சந்திப்பு காதலாக மாறுகிறது. ஆனால் ஒரு விபத்தில் நாயகியின் காதல் மாற்றுப்பாதைக்கு செல்கிறது. அதன் பிறகு கதை என்னவாகிறது என்பதனை த்ரில்லர் பாணியில் சொல்லவிருக்கிறது படம்” என்றார்.

மேலும், படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாகவும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*