By July 20, 20180 CommentsReport

நெகிழும் அமிதாப் பச்சன்..!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகள் ஸ்வேதா நந்தன் இணைந்து நடித்துள்ள புதிய விளம்பரம் ஒன்று தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

பிரபல தங்க நகை மாளிகை விளம்பரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகள் ஸ்வேதா பட்சன் நந்தன் இணைந்து நடித்துள்ளனர். இந்த விளம்பரத்தில் பட்சனுக்கு மகளாக அவரது மகளே முதல்முறையாக நடித்துள்ளார். இது நகைக் கடைக்கான விளம்பரமாகவே இருந்தபோதிலும், இந்த விளம்பரத்தில் அப்பா, மகள் பாசத்தினை அளவு கடந்து வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த வீடியோவினை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அமிதாப், மகளின் பாசம் எப்போதும் சிறந்தது என குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். தனது முதல் விளம்பரத்தில் நடித்துள்ள ஸ்வேதா நந்தனும் விளம்பரத்தின் இறுதியில் அனைவரது உள்ளத்தையும் கவர்ந்துள்ளார். பாலிவுட் இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகி வரும் பிரமஹஸ்த்ரா திரைப்படத்தின் படபிடிப்பில் பிஸியாக இருக்கும் அமிதாப் தற்போது இந்த விளம்பரம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தில், அமிதாப் பச்சனுடன் ரன்பீர் கபூர்,ஆலியா பட், நாகினி நாயகி மௌனி ராய், தெலுங்கு மெகா ஸ்டார் நாகர்ஜுனா ஆகியோர் நடித்துவருகின்றனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*