By July 20, 20180 CommentsReport

விருதை வெல்வாரா கீர்த்தி சுரேஷ்?..!!

மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில் இந்த ஆண்டுக்கான விருதுப் பட்டியலில் நடிகை கீர்த்தி சுரேஷ், சமந்தா ஆகியோரின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றன.

மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழா (IFFM) வருகிற ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 22 வரை நடைபெறவுள்ளது. சிமி கார்வல், நிக்கில் அத்வானி, சூயி மாஸ்லின், ஜில் பில்காக், ஆண்ட்ரூ அனஸ்டாஸியாஸ் ஜாஃப்ரே ரைட் ஆகியோர் இதில் நடுவர்களாக கலந்துகொண்டு விருதுகளைத் தேர்ந்தெடுக்கவுள்ளனர். இந்தப்பட்டியலில் சிறந்த படங்களுக்கான பிரிவில் பேட்மேன்,ஹிக்கி,பத்மாவத்,சஞ்சு,சீக்ரெட் சூப்பர் ஸ்டார், ராஸி உள்ளிட்ட பாலிவுட் படங்களே அதிகம் இடம்பெற்றுள்ளன.

தெலுங்கைப் பொறுத்தவரை மகாநடி, ரங்கஸ்தலம் ஆகிய படங்கள் இடம்பெறுகின்றன. சிறந்த நடிகைகள் பட்டியலில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான மகாநடி படத்தில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷ் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. துணை நடிகை பட்டியலில் இதில் நடித்த சமந்தாவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

பல முன்னணி திரைப் பிரபலங்கள் இந்தியா சார்பாக கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியில் மறைந்த நடிகர் சசி கபூர், நடிகை ஸ்ரீதேவி ஆகியோரை கெளரவப்படுத்தும் விதமாக அவர்கள் நடித்த சித்தார்த்தா படமும் சாந்தினி படமும் சிறப்புத் திரையிடலாகத் திரையிடப்படுகின்றன.


Post a Comment

CAPTCHA
Refresh

*