By July 20, 20180 CommentsReport

சின்னத் தளபதி’ படத்தில் ‘தளபதி’ பட நடிகை..!!

மலையாள நடிகை அபர்ணா வினோத், தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.

விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான படம் பைரவா. அதில் கதாநாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தாலும் மருத்துவக் கல்லூரி மாணவியாக நடித்திருந்த மலையாள நடிகை அபர்ணா வினோத்தும் ரசிகர்களால் அதிகக் கவனம் பெற்றார். மலையாளத்தில் கோஹினூர் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாலும் தமிழில் அவர் கதாநாயகியாக நடிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது அவர் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆகவுள்ளார். ‘இனிது இனிது’ எனும் படத்தை இயக்கிய ஷரன் குமார் இந்தப்படத்தை இயக்குகிறார். தரன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதில் கதாநாயகனாக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடிகர் பரத் நடிக்கிறார். அபர்ணா கதாநாயகியாக அறிமுகம் ஆகும் இந்த முதல் படத்திலேயே குழந்தைக்குத் தாயாகவும், ஆசிரியராகவும் நடிக்கிறார்.

டார்க் த்ரில்லர் வகைப் படமாக இத்திரைப்படம் உருவாகி வருகிறது. கொடைக்கானலில் இம்மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*