By July 22, 20180 CommentsReport

தமிழ்ப் படம் 2: ரிலீஸுக்கு பிந்தைய பஞ்சாயத்து..!!

தமிழ்ப் படம் 2010ஆம் ஆண்டு மிர்ச்சி சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் துரை தயாநிதி தயாரிப்பில் வெளியாகி மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது.

அந்தப் படத்தின் இரண்டாம், மூன்றாம் பாகங்களின் உரிமைகளைத் துரை தயாநிதிக்கு இயக்குநர் சி.எஸ்.அமுதன் எழுதிக் கொடுத்துள்ளார்.

இதற்கிடையில் துரை தயாநிதியிடம் அனுமதி பெறாமல் எஸ்.சஷிகாந்த் தமிழ்ப் படம் – 2 எனும் பெயரில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்த படத்தை சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் தயாரித்து ஜூலை 12 ஆம் தேதி ரிலீஸ் செய்துள்ளார்.

தமிழ்ப் படம் – 2 தமிழக திரையரங்குகளில் அசுர வேகத்தில் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. முதல் நாள் சுமார் 3.50 கோடியை மொத்த வசூலாகப் பெற்றது.

இளைஞர்கள், மாணவர்களை அதிகம் கவர்ந்த தமிழ்ப் படம் – 2 முதல் வாரத்தில் தமிழகத்தில் சுமார் 17 கோடி வரை மொத்த வசூல் ஆனதாகக் கூறப்படுகிறது.

சுமார் 5 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ள தமிழ்ப் படம் – 2 மும்மடங்கு வருமானத்தைப் பெற்றுள்ளது. இவ் வசூல் இவ்வாண்டு வெளியான படங்களில் மிகப்பெரும் சாதனையாக பேசப்பட்டு வரும் நிலையில், வெற்றியைக் கொண்டாட முடியாத நிலையில் தயாரிப்பாளர் உள்ளார்.

தமிழ்ப் படத்தின் அனைத்து உரிமைகளுக்கும் சொந்தக்காரரான துரை தயாநிதியிடம் தலைப்பை பயன்படுத்தி படத்தை தயாரிப்பதற்கான எழுத்துப்பூர்வமான அனுமதியை எஸ்.சஷிகாந்த் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

அதே நேரம் இப்பிரச்சினையில் சமரச முடிவைக் காண்பதற்கு துரை தயாநிதி தரப்பில் தயாராக இருந்தும் தயாரிப்பு தரப்பில் முறையான, நியாயமான முடிவுகள் கூறப்படவில்லை.

எனவே சட்டரீதியான நடவடிக்கைகளைத் துரை தயாநிதி தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் முதற்கட்டமாகத் தொலைக்காட்சி உரிமைக்காக அட்வான்ஸ் போகத் தயாரிப்பாளருக்கு வழங்கப்பட வேண்டிய பாக்கித் தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என அனைத்துப் படங்களையும் பகடி செய்து எடுக்கப்பட்ட தமிழ் படம் – 2 இந்திய, தமிழக அரசியல்வாதிகளையும் விமர்சிக்கத் தவறவில்லை.

அப்படிப்பட்ட ஒரு படத்தை தயாரித்த தயாரிப்பாளர் இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டு விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது தமிழ்ப் படத்தின் மூன்றாம் பாகத்தில் பகடி செய்யப்படுமா?


Post a Comment

CAPTCHA
Refresh

*