By July 22, 20180 CommentsReport

ஜல்லிக்கட்டை படமாக்கும் மலையாள இயக்குநர்..!!

மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் ஜல்லிக்கட்டை மையமாக வைத்துத் தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார்.

மலையாள சினிமாவின் இளம் தலைமுறை இயக்குநர்களுள் முக்கியமானவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. 2010 ஆம் ஆண்டு நாயகன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லிஜோ ஜோஸ், தனது படங்கள் மூலம் மலையாள, தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்ப்பதுடன் சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் கவனம் பெறுகிறார். ஆமேன், அங்கமாலி டைரிஸ், இ.மா.யூ போன்ற படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றன.

மே மாதம் வெளியான இ.மா.யூ படத்தை தொடர்ந்து அவர் இயக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று (ஜூலை 19) வெளியிட்டார். கேரளாவின் ஏதேனும் சிறு நகரைத் தனது படங்களில் ஒரு கதாபாத்திரமாகவே பதிவு செய்யும் லிஜோ ஜோஸ் ஜல்லிகட்டை மையமாக வைத்து படம் இயக்கவுள்ளார். ஜல்லிக்கட்டு எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தின் போஸ்டரை அவர் வெளியிட்டுள்ளார்.

தனது டபுள் பேரல் படத்தை தவிர்த்து அத்தனை படங்களிலும் திரைக்கதையை மற்ற கதாசிரியர்களிடம் இருந்தே பெற்று இயக்கிவரும் லிஜோ ஜோஸ் இந்த முறை எஸ்.ஹரிஷ், ஆர்.ஜெயகுமார் ஆகியோரின் திரைக்கதையை படமாக்கவுள்ளார்.

அங்கமாலி டைரிஸ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த கிரிஷ் கங்காதரன் இந்த படத்தில் இணைந்துள்ளார். பிரசாந்த் பிள்ளை இசையமைக்கிறார். தாமஸ் பணிக்கர் தயாரிக்கிறார். படத்தில் நடிக்கும் நடிகர்கள் உள்ளிட்ட பிற தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளன.


Post a Comment

CAPTCHA
Refresh

*