By July 22, 20180 CommentsReport

ஸ்ரீதேவி வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்..!!

தெலுங்கில் உருவாகிவரும் என்.டி.ஆர் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகை ஸ்ரீதேவியாக நடிக்கவிருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.

தமிழ்நாட்டில் பிறந்து கதாநாயகியாகி தமிழ் சினிமாவில் வெற்றி பெற்று பின்னர் இந்திக்கும் சென்று கொடிகட்டிப் பறந்தவர் ஸ்ரீதேவி. கடந்த பிப்ரவரி மாதம் மர்மமான முறையில் இறந்தார். அவரது வாழ்க்கை வரலாற்றில் நடிக்க நடிகைகள் போட்டி போடுகிறார்கள். ஆனால், ஸ்ரீதேவியாக நடிக்கும் வாய்ப்பு தற்போது நடிகை ரகுல் பிரீத் சிங்குக்குக் கிடைத்துள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் சிங் தமிழில் சில படங்கள் நடித்திருந்தாலும் அவருக்குப் பெயர் வாங்கி கொடுத்தது, கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று. அதன் பின் சூர்யாவோடு என்.ஜி.கே, கார்த்தி நடிக்கும் பெயரிடப்படாத படம், இயக்குநர் ரவிகுமார் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிவரும் திரைப்படம் எனத் தமிழில் தற்போது பிஸியாக நடித்துவருகிறார்.

இந்த நிலையில் தெலுங்கில் உருவாகும் என்.டி.ஆர் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் ரகுல். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. பாலகிருஷ்ணாவின் மகன் நந்தமுரி என்.டி.ஆரின் இளமைகாலத் தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். இவருக்கு ஜோடியாக ரொமான்ஸ் மற்றும் அதிக காட்சிகளில் ரகுல் நடிக்கவுள்ளார்.

என்.டி.ஆர் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை அவரது மகனும் நடிகருமான நந்தமூரி பாலகிருஷ்ணா தயாரித்து நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குநர் கிரிஷ் ஜகர்லமுடி இயக்கி வருகிறார். பாலகிருஷ்ணா என்.டி.ஆராகவும், அவரது மனைவியாக வித்யாபாலனும் நடிக்கிறார்கள். கீர்த்தி சுரேஷ் சிறப்பு வேடத்தில் சாவித்திரியாக நடிக்கிறார். மேலும் முரளி ஷர்மா, பிரஷாத் ரவுள், நாக சைதன்யா, மகேஷ் பாபு, ரானா டகுபதி, மோகன் பாபு மஞ்சு, ராஜசேகர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.


Post a Comment

CAPTCHA
Refresh

*