By July 28, 20180 CommentsReport

இந்தியன் 2 ஷூட்டிங் எப்போது?..!!

ரஜினி நடித்துள்ள ‘2.ஓ’ படம் வெளியான பின்னர் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

அரசியல் ஒருபக்கம், பிக்பாஸ் ஒருபக்கம் என வலம்வரும் கமல்ஹாசன் திரைப்படப் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். விஸ்வரூபம் 2 ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்து படக்குழுவுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம். “ஷங்கர் நண்பன் படம் இயக்கும்போதே இந்தியன் 2 படத்திற்கான திரைக்கதைப் பணிகளை தொடங்கிவிட்டார். முதல் பாகத்தில் நடித்த சேனாதிபதி கதாபாத்திரமே இதிலும் இடம் பெறும். ரஜினி நடித்துள்ள ‘2.ஓ’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் தனித்தனி உதவி இயக்குநர்கள் குழு அமைத்து ‘2.ஓ’, ‘இந்தியன் 2’ பணிகளை ஷங்கர் கவனித்து வருகிறார். கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்த பின்னர், ‘2.ஓ’ ரிலீஸ் ஆன பின்னர் இந்தியன் 2 படப்பிடிப்பு ஆரம்பமாகும்” எனத் தெரிவித்துள்ளனர்.

ரஜினியின் ‘2.ஓ’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி ஏற்கனவே இருமுறை மாற்றியமைக்கப்பட்ட நிலையில் நவம்பர் 29ஆம் தேதி படம் வெளியாகும் என ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் டிசம்பரில் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க அதிக வாய்ப்புகள் உள்ளன. கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாகவும் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் வந்த செய்திகள் குறித்துக் கேட்டபோது அவை உறுதிபடுத்தப்படாத தகவல் என மறுத்துள்ளனர்.

இதுதவிர கமல் நடிப்பில் சபாஷ் நாயுடு திரைப்படமும் இறுதிகட்டப் பணிகள் நிறைவுபெறாமல் உள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*