By July 28, 20180 CommentsReport

சண்டக்கோழி 2: ஷூட்டிங் அப்டேட்..!!

சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடையவுள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார்.

துப்பறிவாளன், இரும்புத்திரை என விஷால் நடிப்பில் வெளியான இருபடங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இரும்புத்திரை தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் வெற்றிகரமாக ஓடிவருகிறது. இதனால் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகிவரும் சண்டக்கோழி 2 திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விஷாலின் ஆரம்பகால வெற்றிப்படங்களில் முக்கியமானது சண்டக்கோழி. மதுரையை மையமாக வைத்து வெளியான அப்படம் அவருக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தது.

லிங்குசாமி இயக்கத்தில் வேட்டை, அஞ்சான் என அடுத்தடுத்து வெளியான படங்கள் ரசிகர்களைக் கவராமல் ஏமாற்றமளித்தன. இதனால் 2005ஆம் ஆண்டு வெற்றி பெற்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை 13 ஆண்டுகள் கழித்து இயக்கி வருகிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வரலட்சுமி நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார்.

இறுதிகட்டப் படப்பிடிப்பில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விஷால் (ஜூலை 22) தனது ட்விட்டர் பக்கத்தில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவேற்றி, “சண்டக்கோழி 2 படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. விரைவில் நிறைவடைய உள்ளது. கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி ஆகியோரிடம் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சிகரமாக உள்ளது. இருவருக்கும் வலிமையான கதாபாத்திரங்கள் அமைந்துள்ளன. கிளைமேக்ஸ் காட்சிக்கான படப்பிடிப்பு நடைபெறுகிறது. அனல் அரசுக்கு இது 25ஆவது படம். இந்த முறை தையல் போடவேண்டியது இருக்காது என நினைக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் முதல்பாகத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் ஆனதைத் தொடர்ந்து இதிலும் அவரே இசையமைக்கிறார். அக்டோபர் 18ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. விரைவில் டீசர், ட்ரெய்லர் வெளியாக உள்ளன.


Post a Comment

CAPTCHA
Refresh

*