By July 28, 20180 CommentsReport

சிவகார்த்தி படத்தில் இணைந்த ராதிகா..!!

நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் முதன்முறையாக நடிக்கவுள்ளார் நடிகை ராதிகா.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவாகிவரும் சிவகார்த்திகேயன் கைவசம் தற்போது மூன்று படங்கள் உள்ளன. அதில் சீமராஜா திரைப்படம் வெளியீட்டுக்குத் தயார் நிலையில் உள்ளது. அடுத்து இன்று நேற்று நாளை திரைப்படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்‌ஷன் கதை களம் கொண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இதனை அடுத்து இயக்குநர் ராஜேஸ் இயக்கத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவையாக உருவாகும் படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தில் நடிகை ராதிகா முதன்முறையாக சிவகார்த்திகேயனோடு இணைந்து நடிக்கவுள்ளார். இந்தச் செய்தியை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார். மேலும், நகைச்சுவை நடிகர் யோகி பாபும் இணைந்துள்ளார்.

ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனோடு இணைந்து நடிக்கிறார். சிவகார்த்திகேயன் அனைத்துப் படத்திலும் இருக்கும் சதீஷ் இந்தப் படத்திலும் நடிக்கவுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*