By July 28, 20180 CommentsReport

NGKக்கு இதுதான் அர்த்தம்..!!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் NGK திரைப்படத்தின் தலைப்புக்கு என்ன அர்த்தம் என்ற கேள்வி படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்து எதிர்பார்ப்பாக இருந்தது. தற்போது அதற்கான விடையைப் படக்குழுவினர் அளித்துள்ளனர்.

தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு சூர்யாவின் 36ஆவது படத்தை இயக்குநர் செல்வராகவன் இயக்கி வருகிறார். இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்கின்றனர். சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளனர்.

இவர்களோடு தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்தப் படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது, இந்தப் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை சூர்யாவின் பிறந்த நாளை (ஜூலை 23) முன்னிட்டு தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா பிறந்த நாளுக்கு ஒரு சர்ப்ரைஸ் உள்ளது என்று அறிவித்திருந்தது NGK படக்குழு. அந்த சர்ப்ரைஸ் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரோடு, இத்தனை நாட்களாக NGK என்றால் என்ன என்ற எதிர்பார்ப்புக்கும் அந்த போஸ்டரில் பதிலும் இடம் பெற்றுள்ளது. அதாவது ‘நந்த கோபாலன் குமரன்’ என்பதுதான் NGK என்பதற்கான அர்த்தம். படத்தை இந்தாண்டு தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*