ஜோதிகா என்ட்ரிக்கு நாள் குறித்த படக்குழு..!!
ஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜோதிகா முதன்முறையாக விதார்த்துடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் திரைப்படம் ‘காற்றின் மொழி’. 2007ஆம் ஆண்டு ராதா மோகன் இயக்கிய ‘மொழி’ திரைப்படத்தில் ஜோதிகா மாற்றுத்திறனாளியாக அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதன் வெற்றியைத் தொடர்ந்து ராதா மோகன் -ஜோதிகா இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர்.
ஜூன் மாதம் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு, திட்டமிட்டதற்கு பத்து நாள்களுக்கு முன்பாகவே கடந்த வாரம் ஒரே கட்டமாக நிறைவடைந்தது. ஆகஸ்ட் 6ஆம் தேதி டப்பிங் பணிகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் படத்தை வெளியிடுவதற்கான தேதியை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் திரைப்பட வெளியீட்டு ஒழுங்குமுறைக் குழு முடிவு செய்துள்ளது. ஆயுத பூஜை விடுமுறை தினங்களை முன்னிட்டு அக்டோபர் 18ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. செப்டம்பர் மாதம் இசை வெளியீடு நடைபெறவுள்ளது.
தனஞ்செயன் தயாரிக்க லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், குமரவேல் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றன. சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.