By August 1, 20180 CommentsReport

‘பெரியார் குத்து’ மேக்கிங்..!!

நடிகர் சிம்புவின் பெரியார் குத்து பாடல் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

சினிமாவில் தொடர் சர்ச்சைகள், தொடர் தோல்விகள் எனச் சமீபகாலமாக இருந்துவந்த சிம்பு அதிலிருந்து விலகி தற்போது தொடர்ச்சியாகப் படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபுவின் மாநாடு ஆகிய படங்களை அவருடைய ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பெரியார் குத்து என்ற தலைப்பில் உருவான பாடலை சமீபத்தில் சிம்பு பாடியிருந்தார். தீபன் பூபதி மற்றும் ரத்தீஷ் வேலு ஆகியோர் தயாரித்த பாடலுக்கு மதன் கார்க்கி பாடல் வரி எழுத, ரமேஷ் தமிழ்மணி இசையமைத்திருந்தார்.

இந்தப் பாடலைப் பாடியிருந்த சிம்பு, தற்போது அந்த ஆல்பத்தில் தானே நடித்தும் உள்ளார். இதற்காகச் சென்னையில் அரங்கம் அமைக்கப்பட்டுப் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது அந்தப் பாடலின் மேக்கிங் வீடியோ யூ ட்யூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கறுப்பு சட்டை அணிந்துவரும் சிம்பு பாடி நடித்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்றுவருகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*