By August 3, 20180 CommentsReport

ஐஸ்வர்யா, அபிஷேக்: மீண்டும் திரையில்..!!

ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் தம்பதியினர் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைப்படத்தில் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள்.

மணிரத்னம் இயக்கத்தில் 2007ஆம் ஆண்டு தமிழ், இந்தியில் திரைக்கு வந்த ‘குரு’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் ஜோடியாக நடித்து இருந்தனர். குரு படப்பிடிப்பில்தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டுத் திருமணம் செய்துகொண்டார்கள். அதன் பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ராவண் படத்தில் இணைந்து நடித்தார்கள். இந்தப் படம் 2010ஆம் ஆண்டு வெளிவந்தது.

அதன் பிறகு இருவரும் ஜோடியாக நடிக்கவில்லை. 8 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் இருவரும் ‘குளோப் ஜாமுன்’ என்ற புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தை அனுராக் காஷ்யப் இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்தப் படம் குறித்த அறிவிப்பை ஐஸ்வர்யா, தற்போது நடித்து திரைக்கு வரவிருக்கும் திரைப்படமான ஃபன்னி கான் புரொமோஷன் நிகழ்ச்சியி உறுதிபடுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, “இயக்குநர் அனுராக் காஷ்யப் ஒரு வருடத்துக்கு முன்பே படத்தின் கதையை சொல்லிவிட்டார். மிகவும் பிடித்திருந்தது. இப்போது அதில் நானும் அபிஷேக் பச்சனும் இணைந்து நடிக்கிறோம்” என்றார். மேலும் ஃபன்னி கான் திரைப்படத்தில் அனில் கபூர், ராஜ்குமார் ராவ் நடித்திருக்கிறார்கள். இதில் பாடகி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யா, அபிஷேக் பச்சன் இணைந்து தூம் 2, அம்ரோ ஜான், சர்கார் ராஜா மற்றும் நா கஹோ போன்ற படங்களிலும் நடித்துள்ளனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*