By August 3, 20180 CommentsReport

பிரியாமணி : விரைவில் நல்ல செய்தி..!!

விரைவில் நல்ல செய்தி ஒன்றை நானும் எனது கணவர் முஸ்தபா ராஜூம் சொல்கிறோம், என்று நடிகை பிரியாமணி கூறியிருக்கிறார்.

பருத்தி வீரன் முத்தழகு கதாபாத்திரத்தை தமிழ் சினிமாவில் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்பட்ட கதாநாயகி கதாபாத்திரங்களில் டாப் 10 பட்டியலில் முத்தழகு கதாபாத்திரத்திற்கு நிச்சயம் இடமுண்டு. அந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து தேசிய விருதையும் பெற்றவர் பிரியாமணி.

பருத்தி வீரன் திரைப்படத்திற்கு முன் பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானர் பிரியாமணி. தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவர் எதிர்பார்த்த கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை என்பதால் தமிழில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஐம்பதுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கடந்த வருடம் அவரது காதலர் முஸ்தபா ராஜை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனத் தொலைக்காட்சி ஷோக்களில் நடுவராகவும் பணியாற்றி வந்தார். சில கன்னட, மலையாளப் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

இதனிடையே பிரியாமணி அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “உங்கள் அனைவருக்கும் ஒரு சுவாரசியமான, மகிழ்ச்சியான செய்தி ஒன்று காத்திருக்கிறது. அதை நானும் என்னுடைய மிஸ்டர் முஸ்தபா ராஜூம் விரைவில் சொல்கிறோம். காத்திருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

அதற்குக் கன்னட நடிகை பருல் யாதவ், ஒரு குழந்தையின் புகைப்படத்தை பதிலாகப் போட்டுள்ளார். தனது தாய்மை பற்றிய அறிவிப்பைத்தான் சஸ்பென்ஸ் வைத்து பிரியாமணி வெளியிட்டுள்ளார் என்கிறார்கள் சமூக வலைதளத்தில்.


Post a Comment

CAPTCHA
Refresh

*