By August 3, 20180 CommentsReport

ரஹ்மானை முந்திய இமான்..!!

‘சூப்பர் சிங்கர்’ புகழ் ஸ்ரீகாந்த், டி.இமான் இசையில் திரைத்துறையில் பாடகராக அறிமுகமாகிறார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த விஜய் டிவி ‘சூப்பர் சிங்கர்’ போட்டியில் செந்தில் கணேஷ் முதலிடம் பிடித்திருந்தார். அதன்படி அவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. அதுபோக முன்னர் சொன்ன போட்டி விதிகளின்படி ஏ.ஆர் ரஹ்மான் இசையில் ஒரு பாடல் பாடுகிற வாய்ப்பையும் அவர் உறுதி செய்தார்.

பொதுவாகவே சூப்பர் சிங்கர் இறுதிப்போட்டிகளில் சில திடீர் சுவாரஸ்ய அறிவிப்புகளை நிர்வாகக்குழுவினர் வெளியிடுவார்கள். அதுபோலவே இம்முறையும் ஓர் அறிவிப்பை வெளியிட்டனர். அதன்படி முதலிடம் பிடித்த செந்தில் கணேஷுக்கு மட்டுமல்லாது ‘செத்த ஜோக்’ ஸ்ரீகாந்த் என செல்லமாக அழைக்கப்படும் போட்டியாளரான ஸ்ரீகாந்துக்கும் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் ஒரு பாடல் பாடும் வாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்தனர்.

இதனால் மேடையிலேயே மிகுந்த உற்சாகமானார் ஸ்ரீகாந்த். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் செந்தில் கணேஷ் எப்போது பாடுவார் எனத் தெரியவில்லை. ஆனால் டி.இமான் இசையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் சீமராஜா படத்தில் ஒரு பாடலை பாட ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டார் செந்தில். அதன்மூலம் அவர் சினிமா பாடகராக அறிமுகம் ஆகிறார்.

அந்தவரிசையில் தற்போது ஸ்ரீகாந்தையும் தனது இசையில் பாடவைக்க முன்வந்திருக்கிறார் டி.இமான். இதுகுறித்து டி.இமான் நேற்று (ஜூலை 31) ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்,“பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் நடிக்கும் பொன் மாணிக்கவேல் படத்தில் ஒரு மெல்லிசைப் பாடலை பாடுவதன் மூலம் இசைத்துறையில் நுழையும் சூப்பர் சிங்கர் போட்டியாளர் ஸ்ரீகாந்துக்கு வாழ்த்துகள்” எனக் கூறியிருக்கிறார்.

இதன்வாயிலாக, டிவி நிகழ்ச்சிகளிலிருந்து டி.இமானால் சினிமாத்துறைக்கு வந்த பலபேர்கொண்ட பட்டியலில் ஸ்ரீகாந்தும் தற்போது இணைந்திருக்கிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*