By August 3, 20180 CommentsReport

ஹேவ்லாக் தீவை மையமிட்ட ‘பூமராங்’ டீம்..!!

கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ள பூமராங் படத்திற்காக ஹேவ்லாக் தீவில் பாடல் காட்சியை படமாக்கிவிட்டுப் படக்குழு திரும்பியுள்ளது. அங்கு எதிர்பாராதவிதமாகப் புயலில் சிக்கி வெற்றிகரமாக பாடல் காட்சியின் படப்பிடிப்பை முடித்துள்ளனர்

டூயட் பாடல் காட்சிகளை படமாக்க வேண்டும் என்றால் இயக்குநர்கள் உடனடியாக உலகவரைபடத்தில் உள்ள ஏதேனும் ஒரு தீவை டிக் அடித்துக் கிளம்பிவிடுகிறார்கள். சமீபத்தில் மிஸ்டர் சந்திரமௌலி, பார்ட்டி ஆகிய படங்களின் பாடல் காட்சிகள் சில தீவுகளில் படமாக்கப்பட்டன.

ராதன் இசையமைப்பில் விவேக் எழுதிய முகயாழி பெண்ணோடு என்ற பாடலுக்கான படப்பிடிப்பிற்காக அந்தமானில் உள்ள ஹேவ்லாக்கில் இருந்து ஒரு தீவுக்கு செல்லும் போது எதிர்பாராதவிதமாக மழை பெய்யத் தொடங்க படப்பிடிப்பை நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பிட்ட நேரத்துக்குள் பிருந்தா மாஸ்டர் நடன இயக்கம் செய்ய படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற்றுள்ளது.

25 நாள்கள் நடைபெற்ற படப்பிடிப்பிற்காக கலங்கரை விளக்கம், நங்கூரம் ஆகியவை உருவாக்கப்பட்டது. பாரத்பூர் கடற்கரை, லக்‌ஷ்மண்பூர் கடற்கரை, நீல் தீவு, ஸ்மித் தீவு உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது.


Post a Comment

CAPTCHA
Refresh

*